• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ஏ.ஐ. ரோபோடிக் சிகிச்சை உள்ளிட்ட நவீன ஆர்த்தோ தொடர்பான சிகிச்சை குறித்த கருத்தரங்கம்

September 20, 2024 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆர்த்தோ சிகிச்சையில் சர்வதேச அளவிலான நவீன மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையின் தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரெக்ஸ்,

வரும் செப்டம்பர் 22ம் தேதி ‘செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும்,
இந்த கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள். மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.கருத்தரங்கில் முக்கிய நிகழ்வுகளாக,ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி வெளிநாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் விரிவுரைகள்,செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோ செய்யும் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சையின் நேரடி ஒளிபரப்பு.தற்போது மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நுட்பங்கள் பற்றி கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் எலும்பியல் துறையில் உள்ள புதுமையான பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய கண்காட்சியும் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க