April 28, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 71-க்குட்பட்ட எம்.சி.சி மற்றும் வார்டு அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சோதனை செய்து வழங்கினார்.
இந்த ஆய்வின்போது கவுன்சிலர் அழகு ஜெயபாலன், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.