May 26, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிக்கலாம் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் கூறி உள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்களை 30 நாட்கள் நோன்பு இருந்து, இறுதியில் ஈகை திருநாளினை கொண்டாப்படுவது வழக்கம். நோன்பு துவங்குவது பற்றிய அறிவிப்பு முறையாக அரசு தலைமை ஹாஜியால் அறிவிப்பது வழக்கம்.
இதையடுத்து,தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் செய்தியாளர்களிடம் கூறும்போது,
இன்று (மே-26 )பிறை தெரியாத காரணத்தால் வரும் 28-ம் தேதி முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என கூறினார்.