August 24, 2017
தண்டோரா குழு
வறுமையின் காரணமாக மோதிரத்தை விற்க வந்தவருக்கு பணம் கொடுத்து உதவிய நகைக்கடை முதலாளி.இந்த சம்பவம் அமெரிக்காவில் பலருக்கு நெகிழ்ச்சியை தந்துள்ளது.
நோவா என்பவர் அமெரிக்காவில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவருடைய கடைக்கு ஒரு தாய் தன்னுடைய இரண்டு சிறிய குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அவரிடம் பணம் இல்லாத காரணத்தால், அவருடைய மோதிரத்தை விற்க விரும்புவதாக கடைக்காரரிடம் தெரிவித்தார். இதனை கேட்ட அந்த நகைக்கடைகாரர், அதை வாங்க மறுத்துவிட்டு, தன்னுடைய சட்டை பையிலிருந்த பணத்தை எடுத்து அவரிடம் தந்தார். நோவாவின் இந்த அன்பை கண்ட அவர் அவரை கட்டியணைத்து தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.
“உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு நம்மால் ஆன உதவியை செய்வது அவசியம்” என்று அந்த நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.