November 18, 2017 தண்டோரா குழு
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில் இதுகுறித்து, ஆடிட்டர் குரூமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று நான்கு மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், ஆடிட்டர் குரூமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
‘ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மன்னார்குடி மாபியா மோசடிக்கான மின்னணு வடிவ ஆதாரங்களை அந்த வீட்டில் தான் வைத்திருந்தது. சசிகலாவிடம் சாவி உள்ளதால், ஜெயலலிதாவின் கோட்டைக்குள் யாரும் நுழைய முடியாது என அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், வருமான வரித்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வருமான வரித்துறைக்கு பாராட்டுகள்’’ என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.