November 27, 2017
அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமி லெக் நெல் பீட்டர்ஸ் மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் லாவேகாஸில் உள்ள பிளானெட் ஹாலிவுட் ரிசார்ட் அண்ட் கேசினோ என்னுமிடத்தில் 66வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சுமார் 92 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு அறிவுத் திறன், நீச்சல் உடை, மாலை நேர உடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
அதில், தாய்லாந்து, ஸ்ரீலங்கா, கானா, ஸ்பெயின், ஐயர்லாந்து, கிரோயேஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், கனடா, பிலிப்பின்ஸ், வெனிசுலா மற்றும் சீனா ஆகிய நாட்டின் அழகிகள் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றனர்.
இறுதிச்சுற்றில் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயது டெமி லெக்நெல் பீட்டர்ஸ் மிஸ் யுனிவெர்ஸ் அழகி பட்டத்தை வென்றார். கொலம்பியா நாட்டை சேர்ந்த லாரா கோன்சாலஸ் இரண்டாவது இடத்தையும், ஜமைக்கா நாட்டை சேர்ந்த டாவினா பென்னெட் மூன்றாவது இடத்தையும்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.