March 30, 2016 முகமது ஆசிக்
காலில் தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த யுவராஜ்சிங் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் இருந்து விலகினார்.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை T20 இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த யுவராஜ்சிங்,
விரைவில் குணமாகி அரையிறுதி போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தசைபிடிப்பு முழுமையாக குணமடையாததால் அணியில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் மணிஸ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யுவராஜ் சிங் விலகல் இந்திய அணிக்குப் பெரிய இழப்பு என்றாலும் தற்போதைய நிலையில் இந்திய அணி ஒரு வீரரை மட்டும் நம்பி விளையாடும் நிலையில் இல்லை என்பதால் எளிதில் சமாளிக்கும் திறன் இந்திய அணிக்கு உண்டு என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
யுவராஜ்சிங் ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்குப் பதில் ஆல்ரவுண்டரான பவன் நகியை ஆடும் லெவன் அணியில் சேர்க்க வேண்டும் என்பது கேப்டன் டோனி விருப்பம். அதே சமயம் இந்திய அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி ரஹானாவை அணி சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அணியில் யுவராஜ்சிங்கிற்கு பதில் யார் அணியில் களம் இறங்குவார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.