May 30, 2017
தண்டோரா குழு
தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா. இப்படத்தின் பர்ட்ஸ் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ரஜினி ஒரு காரில் அமர்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காலா படத்தில் ரஜினி பயன்படுத்திய காரை தங்கள் நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் வைக்க விரும்புவதாக மஹிந்திரா நிறுனத்தின் சேர்மன் ஆனந்த் டுவிட்டரில் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த தனுஷ் ரஜினி அந்த காரை ஷூட்டிங்கில் பயன்படுத்தி வருகிறார். ஷூட்டிங் முடிந்தவுடன் அந்த கார் உங்களை வந்தடையும் என்றார்.