June 24, 2017 தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர் என விமர்சனம் செய்து அவரை மீண்டும் சுப்பிரமணியன் சுவாமி வம்புக்கு இழுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி இன்னும் உறுதியாக கூறவில்லை. எனினும் அரசியல் குறித்து மற்றவர்கள் பேசுவதையும் அவர் மறுக்கவில்லை. அவர் அரசியலுக்கு வருவதை அவர் மீது இன்றும் வெறித்தனமாக இருக்கும் ரசிகர்கள் ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், மறுபக்கம் அவர் மீது சில அரசியல்வாதிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அரசியலுக்கு ரஜினி வருவதை பாஜக வரவேற்கிறது என்று வெளிப்படையாகக் கூறிவிட்டது.
ஆனால், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ரஜினியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். முன்னதாக ரஜினிகாந்த் எதிலும் ஒரு நிலையானவர் இல்லை.அவருக்கு தமிழக அரசியலில் எதிர்காலமும் இல்லைஎன்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர் என்றும்கல்வியறிவு அற்றவர் என்றும் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் சுப்பிரமணிய சுவாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.