June 16, 2017
தண்டோரா குழு
ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, முதல் நாள் கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றார்.
கடைசி நாள் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு காலா படத்தின் சூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான பிரமுகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி நடிகை கஸ்தூரியை அண்மையில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில்,
ரஜினியை சந்தித்து அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் வியூகம் கேட்டறிந்தார். அவர் அரசியலுக்கு வருவார் என நம்புகிறேன் எனக்கூறியுள்ளார்.