May 27, 2017
தண்டோரா குழு
ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் சொல்லவில்லை’ என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜூலை மாதம் இறுதியில் தனது தனிக்கட்சியின் பெயரை அறிவிப்பார். அதற்கான முதற்கட்ட வேலையாக தான் தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளதாக பெங்களூருவில் உள்ள ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியதாக செய்திகள் பரவின. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுக்குறித்து சத்யநாராயண ராவிடம் கேட்ட போது,
“ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் கூறவில்லை. யாரோ தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்” என்றார்.