September 18, 2017 தண்டோரா குழு
புதுதில்லி,
ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்பவர்கள் இரவு 1௦ மணி முதல் காலை 6 மணிவரை தான் தூங்க வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்பவர்கள், தங்களுக்குரிய படுக்கையில் படுத்து தூங்குவது உண்டு. மேல் படுக்கையில் படுப்பவர்களுக்கு அதிக தொந்தரவு கிடையாது. ஆனால், நடு மற்றும் கீழ் படுக்கையை பயன்படுத்தும் பயணிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. நடு படுக்கையில் தூங்குபவர்கள் தாமதமாக எழும்புவதே இந்த சண்டைக்கு முக்கிய காரணம்.
இதன் காரணமாக, ரயிலில் முன்பதிவு செய்து பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் இனிமேல் இரவு 1௦மணி முதல் காலை 6 மணி வரை தான் தூங்க வேண்டும் மற்ற நேரங்களில் கட்டாயம் உட்கார்ந்துகொண்டு வர வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், நோயாளிகள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், மிகுந்த வயதானோர் ஆகியோர் இருக்கும்போது, அந்த பெட்டியில் பயணிக்கும் பயணிகள் அவர்கள் படுத்து பயணிக்க அனுமதி தரவேண்டும் என்று இந்திய ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.