April 24, 2017
தண்டோரா குழு
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது.
இந்தியாவில் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருவதால் ரயில்வே நிர்வாகமும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து செய்து வருகிறது. அதன்படி ஏசி வகுப்பு அல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் சொகுசாக பயணிக்கும் வகையில் பெட்ஷீட், கம்பளி தலையணை போன்றவற்றை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ரயில்வேயின் www.irctc.co.in எனும் இணையதளத்தில், பயணிகள் முன்பதிவு செய்யும் போதே உணவுப்பொருளும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது மட்டுமின்றி ஏசி அல்லாத பிறவகுப்பில் பயணிப்பவர்கள் ரூ.650யை செலுத்தி பெட்- ரோல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதைபோல், ரூ.450ஐ செலுத்தி பெட்ஷீட், தலையணை, மெத்தை விரிப்பு போன்றவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.