April 20, 2017 தண்டோரா குழு
இந்திய ரயில்வே துறையில் புதிய வடிவமைப்பு கொண்ட கழிவறைகள் விரைவில் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகயுள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய ரயில்களில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லை என்றும் சரிவர பராமரிக்க படுவதில்லை என்றும் பல புகார்கள் வருகின்றன.
இந்த புகார்களை தீர்க்கும் வகையில் புதிய வடிவமைப்பு கொண்ட கழிவறைகளை ரயில்களில் அமைக்கப்பட உள்ளது. அதன்படி அடுத்த நான்கு மாதங்களுக்குள் 66 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த புதிய கழிவறையின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கு டைபர் மாற்றும் சிறிய அறை இருக்கும். சுத்தமாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.
இந்த திட்டத்திற்கான செலவு ஒரு கழிவறைக்கு 1.7 லட்சம் ரூபாயாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ரயில்வே கழிவறைகளை நல்ல முறையில் பராமரிக்க உயர் தரமான தரையையும் போடப்படும்” என்றார்.