February 1, 2018 தண்டோரா குழு
ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட் நாடாளுமன்ற மக்களவை துவங்கியது.பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண்ஜெட்லி வாசித்து வருகிறார்.
மத்திய பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகள்:
* ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
* ரயில் தண்டவாள பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்
* 4000 கி.மீ., தூரத்திற்கு ரயில்வே பாதைகள் மின்பாதையாக மாற்றப்படும்
* ரயில்வே பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
* 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்
* மும்பை புறநகர் ரயில் இணைப்பு திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* 25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும்.
*3600 கி.மீ., தூரத்திற்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும்.
*அனைத்து ரயில் நிலையங்களில் வைபை அமைக்கப்படும்.
*4,257 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும்
* 18 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும்.