March 3, 2016 zeenews.india.com
உலகளவில் இந்தியன் ரயில்வேவிற்கு ஒரு தனி மதிப்பு உண்டு. அதிக தூரமும், அதிக பயணிகளையும் ஏற்றிச்செல்லும் போக்குவரத்துகளில் இதுவும் ஒன்று. இந்நிலையில் கடந்த காலங்களில் இருந்த சுகாதார கொள்கைகளை தற்போதுள்ள அரசு மறுசீரமைப்பு செய்து மாற்றியமைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த பொது மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் பொது பதிலலித்த யூனியன் அமைச்சர் மனோஜ் சின்ஹா, ரயில்வேயில் கொடுக்கப்படும் துண்டு, மற்ற துணிவகைகள் தினந்தோறும் துவைக்கப்படுவதாகவும், ஆனால் பெட்ஷிட் மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை துவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பல்வேறு விமர்ச்சனங்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து பதிலலித்த துணை சேனாதிபதி ஹமீது அன்சாரி கூடியவரை தலகணை மற்றும் பெட்ஷீட்கள் பயணிகளே கொண்டுவருவதால் எய்து போன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய சின்ஹா, தற்போது மொத்தம் 41 இடங்களில் மட்டுமே துவைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த தாமதம், தற்போது மேலும் 25 இடங்களில் துணி துவைக்கும் இயந்திரம் அமைக்க உள்ளோம் அப்போது நிலை சீரடையும் எனத் தெரிவித்தார்.
ஆனாலும் தற்போது ரயிலில் செல்வோர்கள் பலர் நிர்வாகத்தால் கொடுக்கப்படும் தலையணை மற்றும் பெட்ஷீட்டை பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.