November 13, 2021 தண்டோரா குழு
ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா ஒரு தனித்துவமிக்க, 18 – 40 வயது இளைஞர்களைக் கொண்ட, சமுதாய பொறுப்புமிக்க ஒரு அமைப்பாகும். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியாவின் இப்பகுதி தலைவர் ஆர். விஷ்ணு பிரபாகர் இந்த வார விழாவை துவக்கி வைத்தார்.
இந்த அமைப்பி்ன் முக்கிய நோக்கமான கல்வி வழியில் சுதந்திரம் என்ற திட்டம் பற்றி விளக்கினார். “இந்த திட்டத்தில் நாடு முழுவதும் ரு.275 கோடி செலவில், 3139 பள்ளிகளில் 7505 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகளால் 7.9 மில்லியன் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 1 வகுப்பறை வீதம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரவுண்ட் டேபிள் வார விழா, பகுதி 7 ல் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், குன்னுார், ஊட்டி, பொள்ளாச்சி, கருர், பாலக்காடு, கோழிககோடு, கண்ணனுார் மற்றும் வயநாடு ஆகிய மையங்கள் உள்ளன. இந்த ஆண்டு, மக்களை இணைப்போம் மற்றும் முடிந்ததை உருவாக்குவோம் ” என்ற கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை முறைகளை மாற்றுவோம்,சமுதாயத்தை வளமாக்குவோம். இந்த வார விழாவில், சாமிசெட்டிபாளையம், மத்தாம்பாளையத்தில் 32 லட்ச ருபாய் செலவில் 4 வகுப்பறைகள் கட்ட பூமி பூஜைகள் நடந்துள்ளன. இந்த பணிகள் இதே வாரத்தில் துவக்கப்படும்,” என்றார்.
ரவுண்ட் டேபிள் இன்டியாவின் நீண்ட கால திட்டங்கள், 40 ஆண்டுகளாக இயங்கி வரும் செயற்கை உறுப்புகள் மையம் மற்றும் இந்த ஆண்டு வழங்கப்படும் 500 செயற்கை உறுப்புகள் பற்றி Tr. ஜிதேஷ் பாப்னா விளக்கினார்.
ராவுண்ட் டேபிள் பசுமையை நோக்கி செல்வோம் திட்டத்தில், இந்த ஆண்டு கோவை மாநகராட்சியுடன் இணைந்து மியாவாக்கி காடு உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ரத்த தானம் மற்றும் கல்வி வழி சுதந்திரம் ஆகிய திட்டங்களை பல்வேறு மையங்கள் வழியில் ஆண்டு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் RT101 ரவுண்ட் டேபிள் Tr.பத்ரிநாத் விளக்கினார்.
ஏரியா சேர்மன் Tr.விஷ்ணு பிரபாகர் பேசுகையில்,
” புராஜக்ட் ஹீல் என்ற ரவுண்ட் டேபிள் இன்டியாவின் திட்டத்தில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது சமுதாயப்பணி மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைக்கும் சக்தியாக இருக்கும்,” என்றார்.
மேலும் விபரங்களுக்கு: 99429-20828