July 25, 2017 தண்டோரா குழு
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் எம்.ஐ.ஜி. 35 ரக போர் விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5௦ ஆண்டுகளாக, ரஷ்யாவின் எம்.ஐ.ஜி. போர் விமானங்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் எம்.ஐ.ஜி. 35 ரக போர் விமானத்தை தயாரித்து உள்ளது.
“இந்த விமானம் சந்தைக்கு புதிய வரவாக இருப்பதால், இந்தியாவின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிந்துக்கொண்டு, அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதற்கு சிறிது காலம் ஆகும். விமானத்தை விற்பது மட்டுமல்லாமல் அதை பராமரிப்புக்கும் எங்கள் நிறுவனம் முழு பொறுபேற்க்கும்.
போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது எம்.ஐ.ஜி.யின் விலை சுமார் 2௦ முதல் 25 சதவீதம் குறைவானது. இந்த விமானத்தை வாங்க விரும்புவோருக்கு இந்த சலுகை கவர்ச்சிகரமாகவும் உள்ளது,” என்று எம்.ஐ.ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தின் தொழில்நுட்பம் ஐந்தாம் தலைமுறை விமானத்தை போன்று இருக்கும். எம்.ஐ.ஜி. 29 ரக போர் விமானத்தை ஒப்பிடுகையில், இந்த விமானத்தில் அதிக போர் பணிகள் பயணம் செய்ய முடியும். புதிய தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள சிறிது நேரம் எடுக்கும்.
ரஷ்யாவின் யூ.இ.சி. (United Engine Corporation) , கே.ஆர்.இ.டி. நிறுவனங்கள் இந்த விமானம் உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.