• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஷ்ய – உக்ரைன் இடையே சமாதானம் நிலவ வேண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள்

March 8, 2022 தண்டோரா குழு

ரஷ்ய-உக்ரைன் இடையே சமாதானம் நிலவ வேண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் ஐவர் போட்டிகள் நடைபெற்றது,பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கால்பந்தாட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் கேத்தி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ரஷ்ய உக்ரைன் போர் நின்று இரு நாடுகள் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என சீன பாதிரியார் ஆர்தர் பெயரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு,கேரளா,கர்நாடக மற்றும் ஆந்திர உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டிகள் இரவு போட்டியாக நடைபெற்றது.

ஒவ்வொரு போட்டிகளுக்கு முன்பும் ரஷ்ய -உக்ரைன் போர் சமாதனமாக முடிய சிறப்பு பிராத்தனையும் நடைப்பெற்றது.விளக்கொளியில் நடைபெற்ற இந்த போட்டிகளை பற்றி இந்த கல்லூரி தாளாளர் நேச மெர்லின் கூறுகையில், உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரானது நின்று சமாதானம் நிலவ வேண்டி போட்டிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இரவு நேரம் நடைபெறும் இந்த கால்பந்து போட்டியில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளதாகவும்,கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் விளையாடி வருவதாக கூறினார்.இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜோஷ்வா ஞானசேகர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் இறுதி போட்டியில் நீலகிரி பைசன் அணியும் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி அணி மோதிய போட்டியில் நீலகிரி பைசன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன்ஷிப் பட்டதை பெற்றது வெற்றி பெற்ற அணிக்கு பரிசி கோப்பை யும் பரிசு தொகையையும் தாளாளர் நேசமெர்லின் வழங்கினார்.

மேலும் படிக்க