• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது – வானதி சீனிவாசன்

October 9, 2024 தண்டோரா குழு

பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுவான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜம்மு – காஷ்மீரில் 29 தொகுதிகளில் பாஜக வென்றது வரலாற்று வெற்றி.மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ஹரியாணா மாநிலத்திலும்,ஜம்மு – காஷ்மீர் யூனியன்பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளி்ல் 48-ல் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, தான் வென்று விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவராக இல்லாமல் அக்கட்சியை வழிநடத்தி வரும் ராகுல் காந்தியை பெரும் தலைவர் போல ஊடகங்கள் சித்தரித்தன.ஹரியாணாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். ராகுல் காந்தி மாயாஜாலம் நிகழ்த்துவார் என, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்த திட்டமிட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். ஊடகங்களில் ராகுல் பற்றிய செய்திகளே அதிகம் வந்தன. ஆனால், மக்கள் பாஜகவையே தேர்ந்தெடுத்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு கட்சி ஆட்சியை தக்க வைப்பது சாதாரணமான விஷயம் அல்ல.
தமிழகத்தில் தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டால், ஹரியாணாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றது எவ்வளவு பெரிய சாதனை என்பது புரியும்.ஜம்மு – காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, சட்டப்பேரவை தேர்தல் நடப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 29-ல் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜம்மு – காஷ்மீரின் சமூக, அரசியல் சூழல் புரிந்தவர்களுக்கு இந்த வெற்றி பெரும் சாதனை என்பது தெரியும். ஜம்மு – காஷ்மீரில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6-ல் மட்டுமே வென்றுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் 25.64 சதவீதம் அதாவது 14 லட்சத்து 62 ஆயிரத்து 225 வாக்குகளைப் பாஜக பெற்று, அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சிக்கு 42 இடங்கள் கிடைத்தாலும், பாஜகவை விட குறைவாக 24.83 சதவீதம் அதாவது 14 லட்சத்து 16 ஆயிரத்து 80 வாக்குகளே பெற்றுள்ளது.இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு சாதகமாகவே மக்கள் தீர்ப்பளித்துள்ளது. இரு மாநிலங்களிலும் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தனர். இரு மாநிலங்களில் ராகுல் காந்தியை முன்னிறுத்தியே அதுவும் ஹரியாணாவில் ராகுல் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது போலவே காங்கிரஸின் பிரசாரம் இருந்தது. ஆனால், மக்கள் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர்.

இரு மாநிலங்களிலும் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டி கூட்டணி கட்டமைத்த மாயையும் தகர்க்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பளித்த ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு நன்றி. அடுத்து வரும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றி தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க