• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜபக்சேவிடம் பரிசு வாங்கியவர்களின் அழுத்தத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செவி சாய்க்கக்கூடாது: ஹெச்.ராஜா

March 25, 2017 தண்டோரா குழு

ராஜபக்சேவிடம் பரிசு வாங்கியவர்களின் அழுத்தத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செவி சாய்க்கக்கூடாது என ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் ஞானம் அறக்கட்டளை சார்பில் ரூ.22 கோடி செலவில் இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம், புளியங்குளம் பகுதிகளில் 150 வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9ம் தேதி இலங்கை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருந்தார்.
இதையடுத்து,திருமாவளவன் , வை.கோ, வேல்முருகன் ஆகியோர் ரஜினி இலங்கை செல்லக் கூடாது என அவரை வலியுறுத்தினர். இதையடுத்து அவரகளது கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினி தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில்,ராஜபக்சேவிடம் பரிசு வாங்கியவர்களின் அழுத்தத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செவி சாய்க்கக்கூடாதுஎன பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க