May 20, 2017
தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரதட்சணையாக கொடுத்த சம்பவம் பெறும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஹிம்மத் சிங் – பிரீதி குன்வார் இடையே திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தின் போது,மணமகளின் தந்தை தனது மருமகனுக்கு ஆம்புலன்ஸை வரட்சணையாக கொடுத்துள்ளார்.
இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை,பெற்றுக் கொண்ட மணமகன் இந்த வாகனத்தை தங்களது உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தங்களது கிராமத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்த இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.