March 27, 2017
தண்டோரா குழு
ராஜஸ்தானில் உள்ள ஒரு உணவு விடுதியில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய டைல்ஸ்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டு தமிழக சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் முகப்பில் ஜெயலலிதா முகம் பதித்த டைல்ஸ்களை ஒட்டுவது வழக்கம். ஆனால், தற்போது, அந்த டைல்ஸ்கள் ராஜஸ்தானில் வலம் வந்து கொண்டிருகிறது.
ஆம்!! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற ஊருக்கு தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அங்கு உள்ள ஒரு உணவு விடுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, உணவு விடுதி சமையல் அறையின் தரைதளத்தில் போடப்பட்டிருக்கும் டைல்ஸ்களில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி அங்குள்ள சந்தையில், ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டிய டைல்ஸ்கள் மலிவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகஅவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் பசுமை வீடுகள் கட்ட தயாரிக்கப்பட்ட டைல்ஸ்கள் பிற மாநிலங்களுக்கு மலிவு விலைக்கு விற்கப்பட்டு வருவது இதன் மூலம் தெரியவருகிறது.