• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணுவத்தில் திருநங்கைகளுக்கு தடை: ஆப்பிள் கூகுள், பேஸ்புக் நிறுனங்கள் கண்டனம்

July 27, 2017 தண்டோரா குழு

ராணுவத்தில் திருநங்கைகள் சேர்வதற்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முடிவுக்கு ஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபமா, திருநங்கைகளும் ராணுவத்தில் பணிபுரியும் வகையில் புதிய சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்திருந்தார். ஆனால், தற்போது இந்த சட்டத்தை மாற்ற உள்ளதாகவும் ராணுவத்தில் பணிபுரிய திருநங்கைகளுக்கு அனுமதி இல்லை என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் ட்விட்டரில் தனது டுவிட்டர் பக்கத்தில்,

நாட்டுக்காக சேவை செய்யும் அனைவருக்கும் நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். இதில், யாருக்கு பாரபட்சம் காட்டினாலும், அது நமக்கே பின்னடைவு எனக் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவன தலைமைச் செயலதிகாரி சுந்தர்பிச்சை கூறும்போது,

ராணுவத்தில் திருநங்கைகளின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ராணுவத்தில் திருநங்கைகளும் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதைபோல், திருநங்கைகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்,

நாட்டுக்கு சேவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க