April 11, 2017
தண்டோரா குழு
நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவின் ராடன் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டில் சோதனை நடந்தது. இது தொடர்பாக நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில், தற்போது ராதிகா நிறுவனத்தில் சோதனை நடந்து வருவது சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.