• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் சித்தியாடைந்தார்

March 27, 2024 தண்டோரா குழு

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு சித்தியடைந்தார்.

2017 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணா மிஷனின் 16 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவாமி ஸ்மரானந்தா. ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் மிகவும் மதிப்பிற்குரிய தலைவர் மகராஜ், ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தாஜி இரவு 8.14 மணிக்கு மகாசமாதி அடைந்தார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் ஏற்கனவே சிறுநீர் பாதை நோய்த்தொற்றுடன் ஜனவரி 29 அன்று ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மூச்சுக்குழாய் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு மார்ச் 3 ஆம் தேதி முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் சித்தியடைந்தார்.

இந்நிலையில், அவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான பதிவில்,

‘ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ், ஆன்மீகம் மற்றும் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். எண்ணற்ற இதயங்களிலும் மனங்களிலும் அழியாத தடம் பதித்தவர். அவரது இரக்கமும் ஞானமும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.பல வருடங்களாக அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது..ஓம் சாந்தி’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க