July 27, 2017
தண்டோரா குழு
ராமேஸ்வரம் – அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் தேசிய நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராமேஸ்வரம் – அயோத்தி இடையேயான அதிவேக ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சகர்கள் மற்றும் முக்கிய தலைவைர்கள் கலந்து கொண்டனர்.