March 21, 2017 தண்டோரா குழு
இந்திய-இலங்கை எல்லை கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 1௦ பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் மீனவர்கள் சுமார் 300 பேர் திங்கட்கிழமை இரவு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய பின்னர் தமிழக மீனவர்கள் 1௦ பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து கூட்டிச் சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை மற்ற மீனவர்கள் கரை திரும்பியதும் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேயம் துறைமுகம் கொண்டு சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. மத்திய ,மாநில அரசுக்கள் உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டு தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.