June 22, 2017
தண்டோரா குழு
பா.ஜ.க.,வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“பா.ஜ.க.,வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஒரு சிறந்த நிர்வாகி என்பதால் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தலித் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்” என்றார்.
முன்னதாக பா.ஜ.க வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.