February 15, 2023 தண்டோரா குழு
இந்தியாவில் முதன் முறையாக நிறுவப்பட்டிருக்கும் காந்த அதிர்வு வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் அல்ட்ராசவுண்ட் அறுவை சிகிச்சை (MRgFUS) சாதன செயல்பாட்டினை இந்தியாவிற்கான இஸ்ரேல் நாட்டின் தூதல் திரு, நோர் கிலோன் கோவை மாநகரில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று தொடங்கி வைத்தார்.
மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். கே.மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். இன்றியமையா நடுக்கங்கள் மற்றும் உதறல்கள் / நடுக்கங்கள் அதிகமிருக்கும் பார்கின்சன்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கு கண்டறியப்பட்டிருக்கும் ஒரு புதிய தொழில்நுட்பமான காந்த அதிர்வு வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் அல்ட்ராசவுண்ட் அறுவை சிகிச்சை என்ற நவீன வசதியினை கோயம்புத்தூரின் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இந்தியாவில் முதன்முறையாக நிறுவியிருக்கிறது.
இயக்க கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் வழிமுறையையே மாற்றுகின்ற திறன் கொண்ட ஒரு தொழில்நுட்பமாக MRgFUS திகழ்கிறது. கை, கால் போன்ற உடலுறுப்புகளில் காணப்படும் உதறல்கள் / நடுக்கங்கள் பிரச்சனைக்கு பல்வேறு மருந்துகளின் மூலம் நீண்ட காலமாகவே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும், குறிப்பிட்டு சொல்லும்படியான சிகிச்சைப் பலன்கள் இவற்றில் கிடைக்கப்பெறுவதில்லை. இன்றியமையா இன்றியமையா நடுக்கங்கள் மற்றும் உதறல்கள் / நடுக்கங்கள் அதிகமிருக்கும் பார்கின்சன்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கு MRgFUS என்று அழைக்கப்படும் இப்புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சையானது, இந்தியாவின் நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு அங்கமான மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் (CDSCO) ஒப்புதல் பெற்றதாகும். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான USFDA நிறுவனமும் MRgFUS சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். கே. மாதேஸ்வரன் இதுபற்றி கூறியதாவது:
“நவீன மருத்துவ சாதனங்கள் மற்றும் புதிய, சமீபத்திய தொழில்நுட்பத் திறன்கள் கொண்டதாக ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறம்பட இயங்கி வருகிறது. மருத்துவத் துறையில் புதியதாக கண்டறியப்படும் புத்தாக்க சாதனங்களையும், செயல்பாடுகளையும் அறிமுகம் செய்வதில் இந்நாட்டில் பல தருணங்களில் இம்மருத்துவமனை முன்னோடியாக இருந்திருக்கிறது. இன்றியமையா நடுக்கங்கள் மற்றும் உதறல்கள் / நடுக்கங்கள் அதிகமிருக்கும் பார்கின்சன்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கு காந்த அதிர்வு வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும்.
அல்ட்ராசவுண்ட் (MRgFUS) என்பது, அவைகளுள் அதிக நவீன மற்றும் மிக சமீபத்திய சிகிச்சை செயல்முறையாகும். மூளையில் மி.மீ. அளவிற்கும் குறைவான பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும் கல்வித் தகுதியும், அனுபவமும் பெற்றிருப்பதோடு, கூர்நோக்க அல்ட்ராசவுண்டு செயல்உத்தியைப் பயன்படுத்துவதில் குறிப்பாக பயிற்சி பெற்றிருக்கும் மூளை – நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் இந்த சிகிச்சைக்கான மருத்துவ செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.”
காந்த அதிர்வு வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் அல்ட்ராசவுண்ட் (MRgFUS), வழக்கமான மருந்துகளுக்கு பதில்வினையாற்றாத அதிக நடுக்கங்கள் / உதறல்கள் இருக்கக்கூடிய பார்கின்சன் நோய் பாதிப்புள்ள நபர்களுக்கு உடலுக்குள் ஊடுருவல் / கீறல் இல்லாத சிகிச்சைக்கான விருப்பத்தேர்வை வழங்குகிறது. காந்த அதிர்வின் மூலம் செயல்படும் இமேஜிங் உபகரணங்கள் மற்றும் அல்ட்ராசவுண்டு என்ற இரு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கலவை கோட்பாட்டின் கீழ் MRgFUS செயல்படுகிறது.
வழக்கமான அறுவைசிகிச்சையில் செய்யப்படும் கீறல்கள் இல்லாமல் நடுக்கங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிகிச்சை விருப்பத்தேர்வாக கூர்நோக்கத்துடன் கூடிய அல்ட்ராசவுண்டு சிகிச்சை முறை திகழ்கிறது. எம்ஆர்ஐ வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படும் இச்சிகிச்சையில் நடுக்கங்கள் / உதறல்களை விளைவிப்பதற்கு காரணமானதாக கருதப்படுகின்ற மூளையின் ஒரு சிறு பகுதி மீது அல்ட்ராசவுண்டு அலைகள் மிக துல்லியமாக, கூர்நோக்கத்துடன் செலுத்தப்படுகின்றன. முதலில் குறைவான ஆற்றலுடன் கூடிய அல்ட்ராசவுண்டு அலைகள் செலுத்தப்படுகின்றன.
சிகிச்சை பெறும் நோயாளிகள் அவர்கள் பெறுகின்ற உணர்வுகளைப் பற்றியும், நடுக்கங்கள் குறைகிறதா என்பது பற்றியும் மற்றும் வாய்ப்பிருக்கும் பிற பக்கவிளைவுகள் பற்றியும் மருத்துவரிடம் எடுத்துக்கூற இது அவர்களை அனுமதிக்கிறது.அதன்பிறகு, குறிப்பிட்ட அந்த நோயாளிக்காக தனிப்பயனாக்கப்பட்ட முறையில் குறிப்பிட்ட இலக்கின் மீது அல்ட்ராசவுண்டு அலைகளை மருத்துவர் மேற்கொள்வார். செலுத்தப்படும் இந்த ஆற்றலானது, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, பாதிப்பை சரிசெய்வதற்கு ஒரு சிறிய தழும்பை உருவாக்கும்.
குறிப்பிட்ட நோயாளிக்குரிய சிகிச்சை திட்டத்தை வடிவமைப்பதற்கு உதவுகிறவாறு சிகிச்சையளிக்கப்படும் உடற்பகுதி மீது முழுமையான ஆய்வு வரைபடத்தை உயர் ரெசல்யூஷனுடன் எம்ஆர்ஐ வழங்குகிறது. இதன் நிகழ் நேர,வெப்ப அளவியல் சாதனம், நோயாளியின் உடல் வெப்பநிலை மாற்றத்தை கண்காணிக்கிறது.இதன்மூலம் உடனடியாக நிகழ்நேரத்திலேயே சிகிச்சைக்கான இலக்கை மாற்றியமைப்பதற்கு இது உதவுகிறது. முழுமையான அகற்றல் நிகழ்த்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய அறுவைசிகிச்சைக்கு ஊடான T2 வெய்ட்டட் உருவ தோற்றங்களை எம்ஆர்ஐ வழங்குகிறது.
தற்போது, இந்தியாவில் இன்றியமையா நடுக்கங்கள் மற்றும் உதறல்கள் / நடுக்கங்கள் அதிகமிருக்கும் பார்கின்சன்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கு MRgFUS சிகிச்சை செயல்முறை ஒப்புதல் பெற்றிருக்கிறது.இச்சிகிச்சை பெற்ற பல நோயாளிகள்,மிக குறைவான தற்காலிக சிக்கல்களோடு தங்களுக்கு இருந்த நடுக்கங்கள் / உதறல்களில் உடனடியாக முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதுநாள் வரை உலகளவில் 3500-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இந்த புதிய சிகிச்சை முறையின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது.