January 17, 2018 தண்டோரா குழு
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
10 ருபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள சில வர்த்தகங்கள் அல்லது வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர் அல்லது தயங்குகின்றனர். இதனால், பல வேளைகளில் பொது மக்கள் நாணயங்களை மற்ற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், பத்து ரூபாய் நாணயங்களில் அனைத்து 14 வடிவமைப்புகளும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுப்படி ஆகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“பத்து ரூபாய் நாணயத்தின் உண்மையானதா? என்று சந்தேகம் இருப்பதால், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் வாங்க தயங்குகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. மத்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் நாணயங்களை விநியோகிகம் செய்து வருகிறோம். பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார மதிப்புகளின் பல்வேறு கருப்பொருள்களை பிரதிபலிக்க தனித்துவ அம்சங்களைக் கொண்டுள்ள இந்த நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதுவரை சுமார் 14 வடிவமைப்புகளில் 10 ரூபாய் நாணயம் வெளியிட்டது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அனைத்து வங்கிகளிலும் இந்த நாணயங்களை பரிவர்த்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.