March 22, 2016 samayal.com
வரும் ஜூன் மாதம் பிரேசிலில் நடக்கவுள்ள ரியோடிஜெனிரோ ஒலிம்பிக்ஸ் போட்டியுடன் தனது ஒலிம்பிக்ஸ் சகாப்தம் முடிவடையா உள்ளதாக உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கு பெறுவீர்களா என்ற செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த உசேன் போல்ட் பதிலளித்த போது, வரும் ரியோ ஒலிம்பிக்ஸ் எனது கடைசி ஒலிம்பிக்ஸ் போட்டியாக அமையும். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வரை இன்னும் 4 ஆண்டுகளுக்கு என்னைத் தொடர்ந்து உத்வேகத்தில் வைத்திருப்பது மிகவும் சிரமமாகும். வரும் ரியோடிஜெனிரோ ஒலிம்பிக்ஸ் போட்டியுடன் நான் ஒளிபிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பது முடிந்து விடும் என்று தெரித்தார். மேலும், அடுத்தாண்டு லண்டனில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியுடன், தடகள போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற உசேன் போல்ட் திட்டமிட்டுள்ளார்.
இந்தாண்டு நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் குறைந்தது 3 தங்கப்பதக்கங்கள் வெல்லத் தீர்மானித்துள்ள உசேன் போல்ட், அதற்கான கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2008 மற்றும் 2012 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தனது அசர வைக்கும் வேகத்தால் 6 தங்கப்பதக்கங்களை உசேன் போல்ட் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
200 மீட்டர் ஓட்ட பந்தயத்தை 19 வினாடிகளுக்குள் கடந்து விடுவது உசேன் போல்ட்டின் இலட்சியமாகும். பெர்லினில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 19.19 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் உலக சாதனை புரிந்துள்ளார்.