• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ. 1.08 கோடி நன்கொடை கொடுத்தார் அக்ஷய் குமார்

March 17, 2017 தண்டோரா குழு

நக்ஸ்லைட்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 12 வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1.௦8 கோடியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேச்சி கிராமத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் சாலை பாதுகாப்பு பிரிவின் 219 படை பிரிவினர் மார்ச் மாதம் 11-ம் தேதி பணியில் இருந்தனர். அப்போது அவர்கள் மீது நக்ஸ்லைட்டுகள் தாக்குதல் நடத்தினர். அதில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1.௦8 கோடியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் ஐபிஎஸ் அதிகாரி அமித் லோதாவுடன் தொடர்புகொண்டு இறந்த வீரர்களின் குடும்பதினர் குறித்து விசாரித்துள்ளார். அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்த பிறகு, உயிரிழந்த வீரர்கள் ஒவ்வொருவருடைய குடும்பத்தினருக்கும் தலா ரூ. 9 லட்சம் தர விரும்புவதாக அந்த அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சூப்பர் ஸ்டாரின் செயல் அந்த அதிகாரியின் உள்ளத்தை நெகிழ வைத்தது. இது குறித்து அவர் கூறுகையில், “இந்தி நடிகர் அக்ஷய் என்னைத் தொடர்புகொண்டு, தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். நான் தெரிவித்த பிறகு, இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்ய விரும்பவதாக உடனே தெரிவித்தார். இந்த கனிவான செயலுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

மேலும் படிக்க