• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.1.7 கோடி மதிப்பிலான 1000 செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – கோவை எஸ்.பி.

April 4, 2023

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு போன சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 101 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.இதனை ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதை தொடர்ந்து எஸ்.பி.பத்ரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தற்போது வரை சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிலான 1000 செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி பிரிவு அமைத்து மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் செல்போன் மாயமான வழக்குகளை தனியாக கையாண்டு செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதேபோல கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் சுமார் ரூ.1.9 கோடி மதிப்பிலான 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 330 பேரிடம் நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது. 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல கடந்த 3 மாதங்களில் 126 குற்ற சம்பவங்கள் நடைபெற்று அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் நடந்த 53 கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 44 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56 போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 26 வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்க தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள 120 கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தனியாக எனக்கு போதை வேண்டாம் என கிளப்கள் துவங்கப்பட உள்ளது. கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சைபர் கிரைம் குற்றச்சம்பங்களில் இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். இதுவரை ரூ.90 லட்சம் வரை வங்கி கணக்கில் இருந்து மோசடியாக திருடப்பட்டதாக வந்த புகாரில் ரூ.60 லட்சம் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு திருப்பி பெற்று தரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 357 ரவுடிகளில் 300 பேருக்கு பிணை வாரண்ட் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 57 பேர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
கேரள கழிவுகளை கோவை மாவட்ட எல்லைகளில் கொட்டப்படுவது தொடர்பாக போலீசார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. மேலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க