January 11, 2022 தண்டோரா குழு
நள்ளிரவில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மளிகை கடைக்குள் புகுந்து ரூ.10 லட்சத்தை திருடிவிட்டு கொள்ளைபோனதாக நாடகமாடிய கடை ஊழியரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அஜீஸ் என்பவர் கோவை டவுன்ஹால் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சம்ஜீத் என்ற வாலிபர் பணிபுரிந்து வருகிறார்.உக்கடம் பகுதியில் தங்கியுள்ள சம்ஜித் கடையை நேற்று இரவு கடையை மூடிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை கடைக்கு வந்த சம்ஜித் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனதாக அஜீஸூக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த அஜீஸ் இதுகுறித்து உக்கடம் போலீசாருக்கு தகவலளித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது சுர்ஜித் சிசிடிவி காமிராவிரல் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை எடுத்து மறைக்க முயன்றார்.
இதனைபார்த்து சந்தேகமடைந்த போலீசார் சம்ஜித்தை பிடித்து விசாரித்தபோது,சம்ஜித் நள்ளிரவில் கடையை திறந்து கடையில் வைக்கப்பட்டிருந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றதும்,இன்று காலை கடையை திறந்து பணம் திருடு போனதாக நாடகமாடியதும் தெரியவந்தது.
இதனைத்தொடரந்து சம்ஜித்தை கைது செய்த போலீசார் அறையில் பதிக்கி வைத்திருந்த பத்துலட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் சம்ஜித்தை விசாரித்து வருகின்றனர்.