March 29, 2022 தண்டோரா குழு
₨4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் சிவரகார்திகேயன் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் மிஸ்டர் லோக்கல். ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.
மிஸ்டர் லோக்கல்’ படத்திற்கான
சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் ₨15 கோடியில் ஞானவேல்ராஜா ₨11 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,₨4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், சம்பள பாக்கியை தரும்வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களை விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.திரையரங்க மற்றும் ஓடிடியின் விநியோக உரிமைகளை உறுதி செய்ய ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் மனு மீது மார்ச் 31ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.