March 16, 2017 தண்டோரா குழு
விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் தாக்கலான நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பிடப்பட்ட அறிவிப்புகள்:
“உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரணத் தொகை ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 5௦0 மையங்கள் அமைக்கப்படும்.
சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தப்படும். பயிர்க் காப்பீட்டு மானியத் திட்டத்திற்கு ரூ.522 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டு மாடுகளைப் பாதுகாக்க அரசு நிதியுதவி வழங்கும். கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”
இவ்வாறு நிதியமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.