July 27, 2022
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 23க்குட்பட்ட விமான நிலைய சேவை சாலை மற்றும் பாரீஸ் நகர் பகுதியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் சுமார் 240 மீட்டர் தொலைவிற்கு ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்த அவர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது உடன் மாமன்ற உறுப்பினர் கே.மணியன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் குமார், சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.