March 24, 2016 வெங்கி சதீஷ்
அரசியல் என்பதே ஒரு முகஸ்துதி செய்பவர்களின் கூடாரம் என்று கூறும் அளவிற்கு ஒரு சிலர் கொண்டு சென்றுள்ளனர். அதிலும் ஒருவரை ஆதரித்துப் பேசும்போது வானம் அளவிற்குப் புகழ்வதும் பின்னர் அதல பாதாளத்தில் போட்டு இகழ்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதற்குச் சமீபகாலமாக மிகப்பெரிய உதாரணம் தே.மு.தி.கவின் நிலைப்பாடுதான். தே.மு.தி.க கூட்டணி பற்றி அறிவிக்கும் முன் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாட்டையும் தற்போது உள்ள நிலைப்பாட்டையும் பார்ப்போம்.
பா.ஜ.க தலைவி தமிழிசை நிலைப்பாடு…….
கூட்டணி அறிவிப்பிற்கு முன்….
தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக தே.மு.தி.க திகழ்கிறது. கேப்டன் சிறந்த தலைவராக இருக்கிறார். கட்டாயம் கூட்டணிக்கு வருவார்.
கூட்டணி அறிவித்த பிறகு……..
தமிழகத்தில் தே.மு.தி.க என்பது ஒரு பூஜ்யம். பூஜியத்துடன் எத்தனைப் பூஜ்யம் சேர்ந்தாலும் அது பூஜ்யம் தான்.
ம.தி.மு.க தலைவர் வைகோ…….
கூட்டணி அறிவுக்கும் முன்….
தே.மு.தி.க தலைமையை ஏற்கமுடியாது. யாரையும் முதல்வர் வேட்பாளர் எனக் குறிப்பிட்டு சொல்லமுடியாது…… (17.03.16 சேலம் பெட்டியில்)….
கூட்டணி அறிவிப்பிற்குப் பிறகு………
இந்தக் கூட்டணியின் பெயர் இனி மக்கள் நலக் கூட்டணி இல்லை. இனி இது கேப்டன் கூட்டணி. தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அனைத்தையும் கேப்டன் முடிவுசெய்வார்….
தி.மு.க நிலைப்பாடு………..
கூட்டணி அறிவிப்பிற்கு முன்………
தம்பி கேப்டன் திறமைசாலி நல்ல முடிவையே எடுப்பார். பலம் கணிந்துக் கொண்டு உள்ளது விரைவில் பாலில் விழும்………(கலைஞர் பெட்டி)
கூட்டணி அறிவிப்பிற்குப் பின்……….
தே.மு.தி.க மாற்றுக் கூட்டணிக்கு சென்றதால் தி.மு.கவிற்கு எந்த நட்டமும் இல்லை. தி.மு.க கூட்டணி வெற்றிபெறும்…. செய்தி தொடர்பாளர் மற்றும் ஸ்டாலின் பெட்டி….
இது போல பல கட்சி தலைவர்கள் பலரைப் பற்றி மாற்றி மாற்றிப் பேசியுள்ளனர். இதனால் அரசியலில் ஈடுபட முக்கிய தகுதியே ரெட்டை நாக்கு வேண்டும் என்பது தான்………………