• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேசன் கடைகளில் மலிவு விலையில் கடலை எண்ணெய் விநியோகிக்க வேண்டும் – மாதர் சம்மேளனம் மாநாட்டில் தீர்மானம்.

September 29, 2023 தண்டோரா குழு

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கோவை மாவட்ட 15வது மாநாடு இன்று, கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்றது. எஸ்.சுதா, டாக்டர் என்.விக்னேஸ்வரி ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினர்.இதில் ரேசன் கடைகளில் மலிவு விலையில் கடலை எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மாதர் சம்மேளன கொடியினை மாவட்டத் தலைவர் நிர்மலா மருதகுட்டி ஏற்றி வைத்தார்.பகத்சின் படத்திற்கு மலர்தூவி அனைவரும் அஞ்சலி செலுத்தினர். கோவை மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன் வரவேற்றுப் பேசினார்.

மாதர் சம்மேளன மாநில தலைவர்களில் ஒருவரான மு.கண்ணகி இன்றைய பெண்கள் பிரச்சினைகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பெ.மௌனசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் 21 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவராக ஜெ.கலா, செயலாளராக எம்.பேபி, பொருளாளராக பி.செல்வகுமாரி, துணைத் தலைவராக ஆர்.மாலதி, துணைச் செயலாளர்களாக சாந்தி சந்திரன், என்.விக்னேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்.

மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டினை வரும் நாடாளுமன்ற தேர்தலிலேயே ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்.

கலைஞர் உரிமைத் தொகைக்கான மேல் முறையீட்டு முகாம்களை உள்ளாட்சி அமைப்புகள் தோறும் நடத்த வேண்டும்.

மேலும் படிக்க