• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு

October 14, 2022 தண்டோரா குழு

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், கரும்பு இனப்பெருக்க நிறுவனம் ஆகியவை வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து உழவர்கள் கூட்டம் நிகழ்ச்சியை நடத்தியது.

இதில்,தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வரவேற்றார்.

விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது:

எதிரும் புதிருமாக உள்ள நாங்கள் மேடையில் ஒன்றாக அமர்ந்துள்ளோம். விவசாயிகளுக்காக ஒன்றாக இருப்போம். கொப்பரை தேங்காய் விலையை ஒன்றிய தென்னை வாரியத்திடம் தமிழக அரசு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். தமிழகத்தில் 41 இடங்களில் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்தோம். இதனால், கொள்முதல் செய்யப்படும் அளவு அதிகமானது.

வேளாண்மைக்கு என தமிழக அரசு தனி பட்ஜெட் அறிவித்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாய துறை பயன்பெறும் வகையில் வேளாண்மை பட்ஜெட் இருக்கும். தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பட்ஜெட் இருக்கும். ஒன்றிய அரசு 50 ஆயிரம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயம் செய்ததில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்துள்ளோம்.

ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஒரு டன்னுக்கு ரூ.105 உள்ளது. அதனை ரூ.150 ஆக ஒன்றிய அரசு உயர்த்த வேண்டும். தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார்.

ஒன்றிய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பேசியதாவது:

விவசாயம் நம் நாட்டின் முக்கிய அங்கமாக உள்ளது. ஒன்றிய அரசு மாநில அரசுடன் இனைந்து விவசாயிகளின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும். தென்னை விவசாயம் என்பது நாட்டின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகத்தில் தேங்காய் உற்பத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. தமிழகம் அதில் முக்கிய இடத்தில் உள்ளது.

குறிப்பாக, கோவை மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா முழுவதும் 21 லட்சம் ஹெக்டரில் தேங்காய் விவசாயம் நடக்கிறது. தமிழகத்தில் தென்னை விவசாயத்தை அதிகரிக்க மாநில அரசு, ஒன்றிய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை பேரிடரில் விவசாயம் பாதிக்கிறது. விவசாயத்திற்கு ஒன்றிய, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.

விவசாய வருமானம் நம் நாட்டின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலத்தில் எல்லாவிதமான வருமான வழிகளும் பாதிக்கப்பட்டன. ஆனால், விவசாய தொழில் இதனை சமாளித்து ஒன்றிய, மாநில அரசுகள் உதவிகளுடன் நன்கு அபிவிருத்தி ஆகியுள்ளது. பிஎம் இன்சூரன்ஸ் ஸ்கிம்மில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிஷான் கிரேடிட் கார்டு திட்டம் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.16 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளிடையே கலந்துரையாடல் நடந்தது. இதில் கலெக்டர் சமீரன், கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குனர் ஹேமா பிரபா, கொச்சி தென்னை வளர்ச்சி வாரிய முதன்மை செயல் அலுவலர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் நாராயணன் மாஸ்டர், தமிழக அரசு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், அம்மன் கே.அர்ஜூனன், பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், தென்னை வளர்ச்சி முதன்மை அலுவலர் அனுமந்தே கவுடா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க