• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேஷன் கடைகளுக்கு தரச்சான்றிதழ் பெற முயற்சி ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் ஐ.எஸ்.ஓ. 28000:2007

September 5, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் ரேஷன் கடைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ரேஷன் கடைகளை மேம்படுத்தி ஐ.எஸ்.ஒ. தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 மாவட்டங்களில் 315 வட்டங்களில் 34 ஆயிரத்து 786 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 2 கோடியே 23 லட்சத்து 44 ஆயிரத்து 604 குடும்ப அட்டைகள் உள்ளன. 6 கோடியே 97 லட்சத்து 93 ஆயிரத்து 426 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மேலும் 246 கிடங்குளும், 292 மண்ணெண்ணெய் பங்குகளும் உள்ளன. கிடங்குகளில் புழுங்கல் அரிசி 282870 மெட்ரிக் டன், பச்சரசி 74386 மெட்ரிக் டன், சர்க்கரை 59896 மெட்ரிக் டன், கோதுமை 84392 மெட்ரிக் டன், துவரம் பருப்பு 17266 மெட்ரிக் டன், உழுந்தம் பருப்பு 19 மெட்ரிக் டன், பாமாயில் 5243675 லிட்டரும் தற்போதைய நிலவரப்படி உள்ளன.

கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன. 11 லட்சத்து 33 ஆயிரத்து 511 குடும்ப அட்டைகள் உள்ளன. 33 லட்சத்து 50 ஆயிரத்து 869 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி ரேஷன் கடைகள் விரைவில் மார்டன் கடைகளாக அமைக்கப்பட உள்ளன. இதன் படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாடர்ன் கடைகளாக மாற்ற சாத்தியகுறு உள்ள கடைகள் குறித்து அன்மையில் வழங்கல் துறை அதிகாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் எண்டரி போடப்பட்டு இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், பருப்பு, கோதுமை போன்றவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மார்டன் கடைகளாக மாற்றம் செய்யப்படும் போது சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ளது போல் பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.தற்போது வழங்கப்படும் பொருட்களை காட்டிலும் மளிகை பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும். மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு ரேஷன் கடை விற்பனையாளரிடம் வர வேண்டும்.

அவர் ஸ்மார்ட் கார்டு மூலம் எண்டரி போடப்பட்டு, விரல் ரேகை பதிவு பெறப்பட்டு இலவச அரிசி மற்றும் பொருட்களின் விலை பட்டியலுடன் ரசீது கொடுப்பார். இதில் மானிய விலை பொருட்களின் விலை குறித்து மக்களுக்கு அதில் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பணம் செலுத்தி பொருட்களை பெற்று செல்லலாம். தற்போது உள்ள நடைமுறையில் இருந்து பொருட்களை விநியோகம் செய்வதில் மட்டுமே மாறுப்பாடு ஏற்பாடும். இலவச அரிசி, மானிய விலை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் ரேஷன் கடைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் ஐ.எஸ்.ஓ. 28000:2007 என இரண்டு வகையான ஐ.எஸ்.ஒ தரச்சான்றிதழ் பெற விரைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஐ.எஸ்.ஓ. 9001 சான்றிதழ் தொழிலின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த உதவும். ஐ.எஸ்.ஓ. 9001 என்பது தரத்திற்காக ஐ.எஸ்.ஓ. நிறுவனத்தால் தரப்படும் குறியீடாகும். ஐ.எஸ்.ஓ. 28000:2007 பாதுகாப்பு மேலாண்மை அமைப்புக்கான தேவைகளைக் குறிப்பிடுகிறது. விநியோகச் சங்கிலியின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு முக்கியமான அம்சங்கள் உட்பட பாதுகாப்பு மேலாண்மை வணிக நிர்வாகத்தின் பல அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தரச்சான்று அனைத்து அளவிலான நிறுவனங்களுக்கும் பொருந்தும், சிறியது முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை பெறலாம்.
இதுகுறித்து கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ ரேஷன் கடைகளில் சேவைகளை மேம்படுத்தவும், ஐ.எஸ்.ஓ. 9001 மற்றும் ஐ.எஸ்.ஒ. 28000: 2007 சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கவும் அனைத்து இணை பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்துறை அதிகாரிகள் அனைவரும் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ரேஷன் கடைகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’’ என்றார்.

மேலும் படிக்க