December 23, 2023 தண்டோரா குழு
மரபணுவால் பாதிக்கப்பட்ட ஆட்டிசம் பாதித்த100 சிறப்பு குழந்தைகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நிகழ்வு அனைவரின் இதயத்தை தொட்ட நிகழ்வாக அமைந்துள்ளது.
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் டவுனின் தனித்துவமிக்க திட்டம் தான், எழுந்து நில் நடந்து செல் 2023 திட்டம் மரபணுவால் பாதிக்கப்பட்ட ஆட்டிசம் பாதித்த 100 சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்குகிறது.மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் டவுன் சார்பில் நடத்தப்படும் இந்த திட்டத்திலான உதவி, மாற்றுத்திறன் வாய்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தங்களது வாழ்க்கை பயணத்தை சுயமாக எழுந்து நிற்கவும், நடந்து செல்லவும் பயன்படும்.
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3201 கவர்னர் ரோட்டரி டி.ஆர். விஜயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 100 சிறப்பு குழந்தைகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், தனிப்பட்ட முறையில் மாற்றுத்திறனாளிகள் இடநகர்வு மேற்கொள்வதை எளிதாக்க வேண்டும் என்பது தான்.
மரபணு பாதிப்பால் மாற்றுத்திறனாளியான குழந்தைகள், மனநலம் குன்றிய 8 முதல் 14 வயதிலான குழந்தைகள் மற்றும் அனைத்து வயதிலும் உள்ள மாற்றுத்திறன் சிறப்புமிக்கவர்கள் நகர்ந்து செல்ல உதவி தேவைப்படும் மக்களுக்கும் இந்த காலிபர்கள் வழங்கப்படுகின்றன.இந்நிகழ்வு அவிநாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரத்னா ரிஜென்ட்டில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், ரோட்டரி உதவி கவர்னர் வெங்கட், ஆனமலை டொயோட்டாவின் இணை நிர்வாக இயக்குனர் விக்னேஷ், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் தலைவர் மோகன்ராஜ், திட்ட தலைவர், ரோட்டரி ஆலோசகர் காட்வின் மரியா விசுவாசம், செயலாளர் குகன், பொருளாளர் விக்னேஷ், கோயம்புத்தூர் மிட்டவுன் ரோட்டரி அவயங்கள் மைய பிரதிநிதி பிரகாஷ் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட ரோட்டரி ஆலோசகரும் திட்டத்தின் தலைவருமான காட்வின் மரியா விசவாசம் பேசுகையில்,
“நில் மற்றும் நட” தனித்துவமிக்க திட்டத்தை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சிறப்பான முறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.400-க்கும் மேற்பட்டோருக்கு உதவிகளை செய்துள்ளது. இந்த ஆண்டு ஆனமலைஸ் டொயோட்டா மற்றும் கருர் ஆசியன் பேப்ரிக்ஸ் இணைந்து இந்த திட்டத்திற்கு உதவியுள்ளன. நிறுவனங்களின் சமுதாய பொறுப்புகளின் ஒரு பகுதியாக இவை இதில் பங்கேற்றுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை உற்பத்தி செய்து வரும் எங்களது பங்குதாரர் கோயம்புத்தூர் மிட்டவுன் ரோட்டரி கிளப்,உதவியுடன் கோவை, மற்றும் கோவையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் உள்ள சிறப்பு மாற்றுத்திறன் குழந்தைகள் 100 பேரை கண்டுபிடிக்க முடிந்தது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்து இவர்களை கண்டறிந்தோம். இந்த திட்டத்தின் வெற்றியாக, விளையாட்டு வீரராக உருவான மோகன் என்பவர், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் அமர்ந்து விளையாடும் வாலிபால், எறி பந்து போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.