• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லஞ்சம் ஊழலில் இந்தியாவிற்கு 9வது இடம்

April 7, 2017 தண்டோரா குழு

லஞ்சம் மற்றும் ஊழல் நடைமுறைகள் குறித்து 41 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா 9வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளில் நடத்தபட்ட ஆய்வில் லஞ்சம் ஊழல்கள் அதிகமாக காணப்படும் உக்ரைன்,சைப்ரஸ், கிரீஸ், ஸ்லோவேனியா, குரோஷியா, கென்யா, தெற்கு ஆப்ரிக்கா, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 9 வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வர்த்தக சூழ்நிலைகளில் காணப்படும் நிலையற்ற தன்மை, நிதி இலக்குகளை அடைவதற்காக கொடுக்கப்படும் நிர்பந்தம், தொழில் முன்னேற்றத்தின் மீதான அதீத ஆர்வம் காரணமாக ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதைபோல் தங்களுடைய சொந்த வாழ்கையை உயர்த்திக்கொள்ள தர்மத்திற்கு மாறாக செயல்பட தயாராக இருப்பதாக 41 சதவீத இந்திய மக்கள் பதிலளித்துள்ளார்கள்.

இந்த ஆய்வின் போது இந்தியாவில் கேள்வி கேட்கப்பட்டவர்களில் 78% பேர் இந்தியாவில் வர்த்தகத்தில் பெரிய அளவில் ஊழல் நடப்பதாக தெரிவித்துள்ளனர். பணிகளையோ அல்லது சம்பளத்தையோ மேம்படுத்த தவறான தகவல்களை தர 13 சதவீத மக்கள் பதிலளித்துள்ளனர்.லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த அறிக்கையை வெளியிட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தடுத்து விடுகின்றனர் என்று 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

“வெளிப்படைத்தன்மை மற்றும் ஆட்சி ஒழுங்குமுறை காரணமாக 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் 6வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 9 வது இடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க