• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லார்சன் அண்டு டுப்ரோ உடன் இணைந்து 5 ஜி சேவைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்கிறது வி நிறுவனம் !

October 20, 2021 தண்டோரா குழு

முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிட் நிறுவனம், ஸ்மார்ட் வேர்ல்ட் மற்றும் கம்யூனிகேஷன் துறையின் பொறியியல் மற்றும் கட்டுமானத்தில் முன்னணி குழும நிறுவனமான, லார்சன் அண்டு டுப்ரோவுடன் இணைந்து கூட்டு செயல்பாட்டில் ஈடுபடுகிறது. அரசு ஒதுக்கீடு செய்துள்ள 5ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான 5ஜி அலைவரிசை சோதனை ஒட்டத்தின் ஒரு பகுதியாக 5ஜியை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார் சிட்டி பயன்களுக்கான பரிசோதனையை மேற்கொள்ள உள்ளது.

ஐஓடி, எல்ஐடியின் ஸ்மார்ட் சிட்டி பிளாட்ஃபார்ம் – ஃப்யூஷன், வீடியோ விஐ தொழில்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட 5ஜி பயன்பாடுகளை ஆராயவும், நகர்மயமாக்கல், காவல் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது, குடிமக்களுக்கு உரிய தீர்வுகளை அளிப்பது ஆகியவற்றை புனே நகரில் மேற்கொள்ளப்படும் சோதனை ஓட்ட முயற்சியில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இவற்றை பரிசோதிக்க உள்ளன.

இந்த கூட்டுச் செயல்பாடு மற்றும் 5ஜி சோதனை ஓட்டம் குறித்து வோடஃபோன் ஐடியா லிமிடெட்டின் தலைமை நிறுவன வணிக அதிகாரி அபிஜித் கிஷோர் கூறுகையில்,

நீடித்த நிலையான ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் முயற்சியில் தொலை தொடர்பு திட்டங்கள் முதுகெலும்பை போன்றவை ஆகும். 5ஜி தொழில்நுட்பத்தின் வருகை, நகர்ப்புற வளர்ச்சியின் சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளையும், எதிர்காலத்தில் நீடித்த நிலையான ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதற்கான தொடக்கம் முதல் சந்தையில் அதன் பயன்பாடு அனைவருக்கும் சென்று சேரும் இறுதிகட்டம் வரையிலான முழுமையான தீர்வுகளையும் வழங்கும்.

5ஜி அடிப்படையிலான ஸ்மார்ட் சிட்டிக்கான தீர்வுகளை ஆராயவும், எதிர்கால நகரங்களை உருவாக்க உதவும் வகையிலான தீர்வுகளை கண்டறியவும், எங்களது ஒன்றிணைந்த நிபுணத்துவம் பயனுடையதாக இருக்கும் வகையிலும் லார்சன் அண்டு டுப்ரோவுடன் கூட்டு சேர்வதில் விஐ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என்றார்.

இது குறித்து எல் அண்டு டி டிஃபென்ஸ் அண்டு ஸ்மார்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாக துணைத் தலைவரும் முழு நேர இயக்குநருமான ஜே டி பாட்டீல் கூறுகையில்,

தொடர்ந்து பரிணமித்து வரும் இந்த உலகில், எளிமையான மற்றும் புத்திசாலித்தனமான தீர்வுகளுக்கான தேவைகள் வெகுவேகமாக அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் ஐஒடி மற்றும் தொலைதொடர்பு சேவையில் சமீபத்திய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் எல் அண்டு டி ஸ்மார்ட் வேர்ல்ட் உறுதியாக உள்ளது.

இந்தியாவின் பல நகரங்களில் வெற்றிகரமாக பல்வேறு தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு ஐஒடி வாயிலான 5ஜி தொழில்நுட்ப சேவைகளை தனிப்பட்ட முறையில் உருவாக்கி வழங்கிய எங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,

இந்த குறிப்பிட்ட முன்முயற்சி எல் அண்டு டி-யின் இணைக்கப்பட்ட சேவைகளின் தனிப்பட்ட வேலைகளில் ஒன்றாகும். இது டிஜிட்டல் மற்றும் இணைக்கப்பட்ட சேவை தளத்தில் மதிப்பு கூட்டல் மற்றும் செயல்பாட்டு நுண்ணறிவுகளை வழங்கவும், நுண்ணறிவைச் சேகரிக்கவும் 5ஜியின் திறனை மேம்படுத்துகிறது. சுகாதார சேவையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளின் உடல் நல பாதிப்பு குறித்த தகவல்களை மருத்துவ நிபுணர்களுக்கு உடனடியாக அணுக முடிவதன் மூலம் உயிர்களை காப்பாற்ற உதவுகிற சேவைகள் உள்பட பல நவீன சேவைகள் இம்முயற்சியில் அடங்கும் என்றார்.

வி மற்றும் லார்சன் அண்டு டுப்ரோ ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுச் செயல்பாட்டின் நோக்கமானது, மேம்பட்ட மொபைல் பிராட்பேண்ட், அல்ட்ரா ரிலையபிள் லோ லேடென்சி கம்யூனிகேஷன்ஸ் மற்றும் மல்டி-அக்சஸ் எட்ஜ் கம்ப்யூட்டிங் போன்ற 5ஜி சேவைகளை உள்ளடக்கிய பல்வேறு 5ஜி அடிப்படையிலான பயன்பாடுகளை பரிசோதித்து பார்ப்பதாகும். இது ஸ்மார்ட் சிட்டியின் பயன்பாடுகளின் செயல்பாட்டு திறனுக்கான தேவைகளை ஆராய உதவும். அதேபோல், 5ஜி- அலைவரிசையில் வர்த்தக மாதிரிகளை கண்டறிய உதவும்.

மேலும், 5ஜி அடிப்படையிலான ஸ்மார்ட் சிட்டியின் காவல் மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளை மேம்படுத்தவும், வடிவமைக்கவும், சோதனை முடிவுகளை ஆராயவும் காட்சிப்படுத்தவும் டேட்டா அனலிட்டிக்கல் கருவிகளை பயன்படுத்தவும் இது உதவும்.

புதுமையான ஐஓடி, மொபிலிட்டி, ஃபிக்ஸட் லைன் டேட்டா, பிசினஸ் கம்யூனிகேஷன் மற்றும் க்ளவுட் சொல்யூஷன்ஸ் ஆகியவற்றுடன் ஸ்மார்ட் சிட்டிகளுக்கான சேவைகளை வழங்கும் உறுதியான நிறுவனமாக வி பிசினஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புனே நகரில், க்ளவுட் கோர் சேவையின் என்ட் டூ என்ட் கேப்டிவ் நெட்வொர்க் முறையில், புதிய தலைமுறை டிரான்ஸ்போர்ட் மற்றும் ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் ஆகியவற்றை 5ஜி சோதனையில் வி நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அதன் ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளில், மிகக் குறைந்த எம்எம் ஸ்பெக்ட்ரம் பாண்டில், தாமதத்தை மிக குறைவான அளவில் அளிக்கும் லேட்டன்சியுடன் கூடிய 3.7 Gbps க்கும் அதிகமான வேகத்தை வி நிறுவனம் எட்டியுள்ளது.

தனித்த நெட்வொர்க் மற்றும் என்ஆர் ரேடியோக்களை பயன்படுத்தி 5ஜி-யில் அதி நவீன உபகரணங்கள் மூலம் இந்த வேகம் எட்டப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறை அதன் பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்காக எம்எம் வேவ் பாண்ட் அலை கற்றையில் வி நிறுவனத்துக்கு 26GHz மற்றும் 3.5 GHz ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்துள்ளது. வி நிறுவனம் அதன் அசல் உதிரிப்பாக உற்பத்தி நிறுவன பங்குதாரர்களுடன் இணைந்து 3.5 GHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் அதிகபட்சமாக 1.5 Gbps வரையிலான பதிவிறக்க வேகத்தை எட்டியுள்ளது.

5ஜி நெட்வொர்க்கின் அதிவேக மற்றும் குறைந்த லேட்டன்சி பயன்பாடுகள், மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஃஒளிபரப்பு போன்ற திறன்கள், 5ஜி ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் தொழிற்சாலைகளின் வளர்ச்சியை மேம்படுத்த அனுமதிக்க உதவுகிறது. 5ஜி சேவையுடன் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தொழிற்துறை 4.0 விரைவுப்படுத்தப்பட்டு டிஜிட்டல் இந்தியாவின் புதிய யுகத்தை தொடங்கி வைக்கும்.

மேலும் படிக்க