March 27, 2017 timesofindia.indiatimes.com
லெக்கின்ஸ் அணிந்து வந்த காரணத்தினால் 2 இளம் பெண்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடைவித்து திருப்பி அனுப்பியுள்ளது யூனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்.
“பயணிகளுக்கு விதித்துள்ள உடுப்பு நெறியை சரியாக பின்பற்றாத காரணத்தால், லெக்கின்ஸ் அணிந்த 2 இளம் பெண்களை யூனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விமானதில் பயணம் செய்ய ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 26) தடை விதித்தது” என்று அந்நிறுவன அதிகாரி ஒருவர் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து யூனைடெட் ஏர்லைன்ஸ் செய்திதொடர்பாளர் ஜோனதன் குறின் கூறுகையில், “அந்த இரண்டு பெண்களும் விதியை சரியாக பின்பற்றியிருந்தால், அவர்களுக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது. அவர்கள் இருவரரிடமும் வேறு உடையிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள், இல்லையென்றால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று தெரிவித்தோம். அவர்களிடம் வேறு உடை இல்லாததால், அவர்கள் பயணத்தை தவறிவிட்டனர்.” என்றார்.
விமான நிலையத்தில் அந்த பெண்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த விவாதத்தை ஷாணன் வாட்ஸ் என்பவர் கேட்டுள்ளார்.
“பெண்களுக்கும் விதிக்கப்படும் விதிமுறைகள் நியாயமற்றது. இந்த நடவடிக்கை இளம்பெண்களின் குடும்பத்திற்கு வெட்கமும் தொந்தரவையும் கொடுத்துள்ளது ” என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.