March 8, 2022 தண்டோரா குழு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, லேடிஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பின் ,ஏரியா 7 சார்பில் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினமாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாட பட்டு வருகினற்து,இந்த நாளில், பெண்களைப் போற்றவும்,அவர்களின் தைரியத்தைப் போற்றவும்,அவர்களின் வெற்றியைக் கொண்டாடவும்,பெண்களின் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் லேடிஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பின் ஏரியா 7 முன்னேடுத்து வருகின்றது.
இந்நிலையில் மகளிர் தின விருது வழங்கும் விழா ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சீமா அரங்கில் நடைபெற்றது.அமைப்பின் நிர்வாகிகள் பிரியங்கா சபேர்வால்,வசூதா டால்மியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், சாதனை படைத்த பெண்களான, சாந்தி ஆசிரமத்தைச் சேர்ந்த டாக்டர் கேசவினு அறம்,கௌமாரம் பிரசாந்தி அகாடமி தீபா மோகன்ராஜ்,ஸ்வர்கா அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஸ்வர்ணலதா,யுவா அறக்கட்டளை சசிகலா சந்திரா, யங் இந்தியன் அமைப்பின் ப்ராஜெக்ட் மாஸூன் தலைவர் ராஜலட்சுமி விஷ்ணு, ஆரோ அமைப்பின் பிந்து நாயர்,கோவை கிரிம்சன் அறக்கட்டளை தலைவர் லதா சுந்தரம், திருப்பூர் கிரிம்சன் பிரிவு தலைவர் சாந்தி பொம் சுமதி கேனன், , ஜிசி,மகளிர் நலத்துறை இயக்குனர் இந்திராணி, கோயம்புத்தூர் பெற்றோர் நெட்வொர்க் ரெயின்போ பாலத்தின் மகாலட்சுமி, கோவை பெற்றோர் நெட்வொர்க் அமைப்பின் சார்பில், குமுதா சந்திரிகா, ஆகிய பெண்களுக்கு, மகளீர்தினத்தை போற்றும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கபட்டது.