April 27, 2017 தண்டோரா குழு
ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தாமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நிறை வேற்றப்பட்டு 2014ம் ஆண்டு அமலுக்கு வந்த லோக்பால் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து அதற்குரிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,
லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தாமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை.எதிர்க்கட்சி தலைவர் என்று யாரும் இல்லை என மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல. தேவையெனில், எந்த கட்சி அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளதோ அந்த கட்சியின் தலைவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து லோக்பால் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் , உறுப்பினர்கள் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவருக்கான முக்கிய முன்னுரிமை இடம் இருக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.