• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு – இந்தியா விரைந்து செயல்பட சத்குரு வலியுறுத்தல்

August 7, 2024 தண்டோரா குழு

வங்கதேசத்தில் இந்து மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து சத்குரு அவர்கள் எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு, இதில் நம் பாரத நாடு விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சத்குருவின் எக்ஸ் பதிவில் “இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது. இந்த நாட்டின் அங்கமாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது. ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு” எனப் பதிவிட்டு உள்ளார்.

அவரின் இந்தப் பதிவில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்வவங்கள் குறித்து அந்நாட்டில் வெளியாகும் ‘த டைலி ஸ்டார் (The Daily Star)’ என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியையும் பகிர்ந்து உள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் பகிர்ந்த மற்றொரு எக்ஸ் பதிவில் “நம் அண்டை நாட்டின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம். மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதி செய்வோம்” எனப் பதிவிட்டு உள்ளார்.

மேலும் படிக்க