• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடகிழக்கு பருவ மழை துவக்கம் – கோவையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

November 4, 2022 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் அமைப்பு சார்பில் போதைப்பொருள் தவிர்த்தல், பாதுகாப்பான பயணம் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வரும் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியினை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் , மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறும்போது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் பவானி ஆற்றோரம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சில பகுதிகள், வால்பாறை மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் என 16 இடங்களை அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
உள்ளாட்சி அமைப்புகள் தூர்வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சி பகுதியில் 85 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அரை துவங்கப்பட்டுள்ளது எனவும் மழை நீர் தேங்கினால் அகற்றும் தண்ணீர்களை உறிஞ்செடுக்கும் உயரிய கருவிகள் தயாராக உள்ளன என தெரிவித்தார். கோவை மாவட்ட எல்லைகள் பறவை காய்ச்சல் எதிரொலியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வாளையார் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. கோவையில் பறவைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இல்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க